புத்தளம்- கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து வருகை தந்த 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேரே இதன்போது காயமடைந்ததாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியும் மற்றுமொருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment