சர்வக்கட்சி அரசில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நிராகித்துள்ளார்.
அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சகூட பிரதமரிடம், இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ராஜிதவுக்கும் தூதனுப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை, இது சாத்தியப்படாது எனவும், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை தான் மதிப்பதாகவும் ராஜித சேனாரத்தன, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும், இம்முறை ராஜித சேனாரத்ன கடும் தொனியிலேயே கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
“ ஒழுக்காற்று நடவடிக்கை என்பது நகைச்சுவையாக மாறியுள்ளது. டயானா கமகேவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர் பிரிட்டன் பிரஜை. இதை நிரூபித்தால் எம்.பி. பதவியைக்கூட பறித்துவிடலாம். ஆனால் இதனை கட்சி செய்யவில்லை. அதனால்தான் டயானா கமகே , எல்லா விடயங்களிலும் கட்சியை விமர்சித்துவருகின்றார். ஹரின், மனுச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், டயானா விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என ராஜித இடித்துரைத்துள்ளார்.
#SriLankaNews