24 66a4d7a0c3ad3
இலங்கைசெய்திகள்

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

Share

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஜனாதிபதி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்களின் உதவியுடன் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது காவல்துறை மா அதிபர் இல்லை எனவும் இதனால் தேர்தல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபர் இல்லாவிட்டாலும், அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படுமெனவும், இதனை வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் சரிவர பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கும் மற்றும் அதனை எதிர்த்து செயல்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தேர்தல்களை கண்காணிக்கும் அனைத்து அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...