மாத்தறை – கொஸ்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் தெல்கஹ பிரதேசத்தில் காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தனிப்பட்ட பகையின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews