மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி

Share

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி

மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவிலிருந்து பெருந்தொகையான பணத்தை பெறப்போவதாக ஆசை காட்டி மோசடி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் “உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர்” என குறித்த பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்களுக்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பி பொதியொன்றை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பொதியில் 70 ஆயிரம் டொலர், தங்க ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது இது சட்டவிரோதமானது எனவே இந்த பொதியை சுங்கதிணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தேவை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொதியில் உள்ள 70 ஆயிரம் டொலரை காணொளி எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய குறித்த பெண் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் 95 ஆயிரம் ரூபாவை அனுப்பியுள்ளார்.

பின்னர் சுங்க திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார்.

அண்மை காலமாக வெளிநாட்டில் இருந்து பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாகவும் இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலச்சம் தொடக்கம் 6 இலச்சம் ரூபாவரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...