மாணவர் ஒருவர் விடைத்தாளில் கேள்விகளுக்குப் பாடல்களை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான விடைத்தாளை ஆசிரியர்கள் பார்க்கும் போது அப்படியே அடித்து 0 மதிப்பெண்கள் கொடுப்பர்.
ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக ஆசிரியர், மாணவனின் முழு பாடல்களைப் படித்து அதற்கு மாற்று கருத்தையும் எழுதியுள்ளார்.
தற்போது அந்த விடைத்தாளின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலான காணொளியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் என்பது தெரிகிறது.
வெறும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியுள்ள மாணவர், சினிமா பாடல் வரிகளைக் கொண்டு நிரப்பி உள்ளான்.
அதில் ஒரு கேள்விக்கு, “மாம் நீங்கள் மிகவும் புத்திசாலி, நான் சரியாக படிக்காதது தான் காரணம் என்றும், கடவுளே எனக்கு கொஞ்சம் படிப்பதற்கு திறமையை கொடு” என்று எழுதியுள்ளான்.
#srilankaNews
Leave a comment