FB IMG 1560341662019 750x375 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் கையை வெட்டினான்

Share

போதைப்பாக்குடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஆசிரியர்களிடம் மாட்டிய நிலையில், கையை பிளேட்டினால் வெட்டியுள்ளான்.

தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் போதைப் பாக்கினை உண்ட நிலையில், பாடசாலைக்கு சென்றுள்ளார். இவ்விடயத்தை அறிந்த ஆசிரியர்கள் மாணவனை விசாரித்து பாக்கினையும் மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரினால் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்ட போது குறித்த மாணவன் கையை பிளேற்றால் வெட்டியுள்ளார். காயத்திற்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு எவ்வாறு போதைப் பாக்கு கிடைத்தது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...