கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்!

kFgWTwMhyeeGObNkIi7z

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில்  சிங்கள பேரினவாத அரசினால் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.​

குறித்த போராட்டத்தில் இந்த  மண் எங்களின் சொந்த  மண் .
இராணுவமே வெளியேறு , தமிழர் தேசத்தில் அவமான புத்த விகாரை எதற்கு போன்ற தமிழர்  தமிழர் உரிமை சார்ந்த முழக்கம்  விண்ணதிர  போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டது

இந்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

#srilankaNews

Exit mobile version