யாழ் நகரில் பொருட் கொள்வனவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களை நிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ் நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார், யாழ் மாநகர சபையுடன் இணைந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில் பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையியை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து பொலிஸார் நகர பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
#SriLankaNews