இலங்கைசெய்திகள்

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

5 19
Share

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த மக்கள் விடுதலை முன்னணி வீரர்களின் உயிரிழப்புக்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னிலை சோசலிசக் கட்சி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளது. .

1988 – 1989 காலப்பகுதியில் அரச அங்கீகாரம் பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பித்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுதரவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 13ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும், 35 ஆவது “இல்மஹா விரு சமருவ” என்ற உயிர்நீத்த ஜேவிபியினரின் நினைவேந்தல் தொடர்பில், ரோஹன விஜேவீர உள்ளிட்டோரை கௌரவித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பின்னால் இருந்தது “அரச பயங்கரவாதம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் 1988-1989 தென்னிலங்கை எழுச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, வடக்குகிழக்கின் உள்நாட்டு மோதலின் போதும் இது பரவியிருந்தது. என்று முன்னிலை சோசலிக்கட்சி கூறியுள்ளது.

முன்னைய நிர்வாகங்களால் இந்த கோரிக்கைகளுக்கு உண்மையான நீதியை கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில்,ரோஹன விஜேவீர உட்பட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...