யாழில் திடீரென தீப்பற்றிய தனியார் விருந்தினர் விடுதி

யாழ் – கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மின்னொழுக்கே குறித்த தீர்வுக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

IMG 20230408 WA0086

#SriLankaNews

Exit mobile version