tamilni 418 scaled
இலங்கைசெய்திகள்

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்

Share

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபர் கடந்த 8 வருடங்களாக ராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ளதாகவும், இவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு ஆறு இலடம்சம் ரூபாய் பெறுமதியை பொருட்களை கடனாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவர் பெற்ற கடனை செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் இவருக்கெதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும், நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 23ஆம் திகதி இராகலை நகருக்குச் சென்று அவரை கைது செய்ததுடன், இராகலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை நாளையதினம்(29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நேற்று முன்தினம்(26) இரவு ராகலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு நீதிமன்றில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் உள்ளிட்டோர் நேற்று(28) அதிகாலை நீர்கொழும்புக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததை அவதானித்ததாகவும், பதுளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 29ஆம் திகதி தன்னை பிணையில் எடுக்குமாறு கூறிய தனது சகோதரன் இப்படி ஒரு தவறான முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை எனவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்று உயிரிழந்தவரின் மனைவியும் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...