வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது, வெலிகம பிரதேசத்தில் வைத்து 27 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews

