பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை?

Bandula Gunawardane

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள சட்டமாகும் என்றும், அதில் உள்ள சில நிபந்தனைகளுக்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .

எதிர்வரும் காலங்களில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version