பிள்ளைகளுடன் ஆற்றில் பாய்ந்த தாய் உயிரிழப்பு!

Kalu River

32 வயதான பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 5 வயதான மகன் சடலமாகவே மீட்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

#SriLankaNews

Exit mobile version