யாழில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து! – ஒருவர் பலி

1669883832 acdnt 2

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version