29 13
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

Share

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

வவுனியா – கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐய்யனார் கோவில் திருவிழாவில் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா(Vavuniya) வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்று (26.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது வழிருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...