சிறுமியொருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பம்புரன தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலி நோக்கி பயணித்த தொடருந்தொன்றிலேயே நேற்றுமாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீன்தெடிய தர்மராஜ வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் பயின்றுவந்த ஹீன்தெடிய, பென்தொடகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நண்பிகள் மூவருடன் விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் தண்டவாளம் வழியாக நடந்துசென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#srilankaNews
Leave a comment