14 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

Share

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன

ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

276 கிலோகிராம் எடையுள்ள மோட்டார் சைக்கிள் அளவுக்குப் பெரிய இந்த மீனை நாட்டில் உள்ள பிரபல உணவக உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய மீன் ஏல வரலாற்றில் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் என்ற சாதனைப் புத்தகத்தில் இந்த மீன் நுழைந்ததாகவும், அதற்கு முன் 2019 இல் 278 கிலோ எடை கொண்ட மீன் 3.1 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீன்களை கொள்வனவு செய்த ஒனோடெரா குழுமம் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அதிக விலைக்கு மீனை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற மீன் ஏலத்தில் மீன் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனம் 7 இலட்சம் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share
தொடர்புடையது
MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...

25 68fb2b3437459 1
இலங்கைசெய்திகள்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் மீட்பு!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புத்தல...

MediaFile
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சோகம்: ஏகாதசி தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை...