யாழில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 1

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது.

அவ்வேளையிலையே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை அனைத்து முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்

இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்ரரை லட்சம் ரூபா இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

#srilankanews

Exit mobile version