சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு வீழ்ச்சி!

food waste Ramadan 480x320 1

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அதிகமாக உணவு தயாரிப்பில் ஈடுபடாமையும் இதற்கு காரணமாகும்.

மேல் மாகாணத்தில் கடந்த வருடங்களில் நாளாந்தம் 300 மெட்ரிக் தொன் உணவுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 180 மெட்ரிக் தொன் உணவுக்கழிவுகளே சேகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உணவுக்கழிவுகளில் இருந்து சேதனப் பசளையை தயாரித்து வழங்க முடியும் எனவும் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version