மனசாட்சியுள்ளோர் பதவியைப் பெறமாட்டார்!

ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்

ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்

மனசாட்சியுள்ள எவருக்கும் தற்போதைக்கு அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ள முடியாது எனவும், வங்குரோத்தடைந்துள்ள நாட்டில் எப்படி அமைச்சுப் பதவிகளையும், சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் பெறுவது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் குழந்தைகள் சரியான ஊட்டச்சத்தின்றி மயக்கமடைந்து விழும் நாட்டில், இருண்ட எதிர்காலத்தால் அப்பாவி இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில், ஒட்டுமொத்த மக்களும் வறுமையின் பிடியில் வாடும் நேரத்தில், உணர்வுள்ள, புரிதலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளுக்கு, சலுகை வரப்பிரசாதங்களுக்கு உட்பட முடியாது.

நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் போது அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும் பிரதி அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும் மட்டுப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். என்றாலும், மொட்டுவின் பலத்துடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த ஜனாதிபதியால் அவ்வாறு செயற்பட முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version