சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரனும் பங்கேற்றிருந்தார.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி நாளும் அதில் கூட்டமைப்பின் வகிபாகம் பற்றி ஆராயப்படவில்லை இது சம்பந்தமாக கட்சியினுடைய மேல்மட்டத்தில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
#SriLankaNews