இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பாடகர் மீது சரமாரி வாள்வெட்டு!

Share

பாடகர் மீது சரமாரி வாள்வெட்டு!

மட்டக்களப்பு பாடகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு இலக்கான பாடகர் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்கள் தீவிரமாக இருந்தபடியால் மேலதிக சிகிச்சை தேவை என்ற பட்சத்தில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரவுவேளை தனது சொந்த ஊரில் இருந்து மண்டூரிலுள்ள கடையில் உணவு வாங்கச்சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரிய வாளால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக சொல்லிசை பாடகர் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் வெல்லாவெளி காவல்துறையில் முறைப்பாடு வழங்கியதையடுத்து, வாள் வெட்டு நடத்தியவரை வெல்லாவெளி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர் களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...