ரம்புக்கனையில் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்குத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ரம்புக்கனையில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews