சண்டிலிப்பாயில் 9 குடும்பங்கள் பாதிப்பு!

IMG 9705

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே – 141 மற்றும் ஜே – 142  ஆகிய கிராம சேவகர் பிரிவு  பகுதிகளிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version