நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவதானமின்றியே செயற்பட்டு வருகின்றனர்.
17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில், இதுவரை பொலிஸாரால் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கருத்து வெளியிட்டுள்ளது.
#SriLankaNews