பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் 8 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த டிரக்டர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.