9982cabe62
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் ரொனிக்கை குடித்த 66 குழந்தைகள் உயிரிழப்பு.

Share

மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா (Gambia) நாட்டில் 66 குழந்தைகள் இறந்தமைக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் ரொனிக்குகள்தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை. ஹரியானாவின் சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் Maiden Pharmaceuticals Limited தயாரிக்கப்பட்ட இந்த 4 ரொனிக்குகளை குடித்ததால்தான் சிறுநீரக பாதிப்பு மற்றும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலியால் குழந்தைகளின மரணம் நிகழ்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதுவரை 66 குழந்தைகள் இந்த ரொனிக்குகளை குடித்ததால் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பான WHO விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த 4 மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இம்மருந்துகள் உயிராபத்துகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹரியானா நிறுவனம் தயாரித்த இந்த மருந்துகளில் அதிக எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் ஆகியவைதான் மரணத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விரைவில் விரிவான தகவல்களை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...