உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன்!

world bank 20220162151

உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறையை வலுவூட்டும் உலக வங்கியின் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆணைமடு வைத்தியசாலை ஆகியவற்றுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உலக வங்கி திட்டமானது வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகள் மட்டத்தில் இத்தகைய மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு ஒரு 198,000 நபர்களின் தகவல்களை டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் சேர்க்க முடிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version