19 14
இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வரப்போகும் பணம் : வெளியான அறிவிப்பு

Share

மன்னார் (Mannar) மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4,285 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை ( Agricultural and Agrarian Insurance Board) தெரிவித்துள்ளது.

அதன்படி நாளைய தினம் (26.02.2025) மன்னார் மாவட்டத்தில் 9,228 ஏக்கர் நிலத்தில் பயிர் சேதம் ஏற்பட்ட 4,285 விவசாயிகளின் கணக்குகளில் 126 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்படவுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு பெரும்போகத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பயிர் சேத இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட 37,887 ஏக்கர் நிலங்களின் 33,735 விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அவர்களின் கணக்குகளில் ரூ.602 மில்லியன் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது.

அதிக பயிர் சேதம் ஏற்பட்ட மாவட்டங்களில் இழப்பீட்டுத் தொகைகள் வழங்குவத தற்போது நிறைவடைந்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...