4 49
இலங்கைசெய்திகள்

6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு : பொது மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Share

6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு : பொது மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்களை வெறும் கண்களால் பார்ப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இது போன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் கோள்கள் ஒரே பார்வையில் சந்திக்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படும்.

அந்த வகையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு நேற்று முதல் ஆரம்பமானதுடன் இது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் கூறியதாவது:‘கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை தருகின்றன.

இந்நிகழ்வை, ‘பிளானட்டரி பரேட்’ என்கிறோம். இவற்றை, வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழாது. கடந்த 2022 ஜூனில், ஐந்து கோள்கள் நேர்கோட்டில் வந்தன. தற்போது, ஆறு கோள்கள் வருகின்றன.

அடுத்த மாதம் 28ம் தேதி ஏழு கோள்களை பார்க்கலாம். இதையடுத்து, ஆகஸ்ட் மாத மத்தியிலும், இவ்வாறான நிகழ்வு ஏற்படும்.

அதைத் தொடர்ந்து, 2040ல் தான், இதுபோன்று நிகழும். இவை கிழக்கு – மேற்காக காணப்படும். நட்சத்திரங்கள் போல் மின்னாது. அளவில் சற்று பெரிதாக இருக்கும்.

அதிக பிரகாசத்துடன் காணப்படுவது வெள்ளி கோள். அதைத் தொடர்ந்து, செம்பழுப்பு நிறத்தில் செவ்வாய் கோள் காணப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...