காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.
சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமுக்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் நடத்தி இருந்தது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலின்போது 58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், நேற்றுக் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகக் கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
குறித்த கைதிகளைக் கண்டறியும் நடவடிக்கையில் தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews
Leave a comment