வன விலங்குகளினால் 54 பில்லியன் பயிர் சேதம்

mahinda amaraweera 6756

விவசாய அமைச்சின் மதிப்பீடுகளின்படி ,இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை அடங்கும்.

இவற்றில் காட்டு யானைகள் தவிர இன்னும் ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்பான விசேட அறிக்கையொன்றை தயாரித்துள்ளதுடன் அந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version