நிதி நெருக்கடி – உலக சந்தையில் 50,000 கோடி கடன்!

Ministry of Energy 56767

சர்வதேச சந்தையில் இருந்து சுமார் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை உடனடியாகப் பெற எரிசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது

நாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கே இக் கடன்தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது,

இந்தக் கடன் தொகைக்கு 2 வருட சலுகைக் காலமும் திருப்பிச்செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும், அத்துடன் 3 சதவீத ஆண்டு வட்டி வீதத்தில்பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் எனவும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில அமைச்சரவைக்கு தெரிவிக்கையில், தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து 330 மில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது எனது தெரிவித்துள்ளார்.

Exit mobile version