நாட்டுக்கு 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்!

90894 Tourism accounts for a large part of Sri Lankas economy

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த சுற்றுலாப் பயணிகளில் 12,762 ​பேர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,937 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் 264,022 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version