இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 சண்டை கோழிகள் மன்னாரில் சுற்றிவளைப்பு!

Sri Lanka Navy 1 copy 765x510 1

சேவல் சண்டைக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 50 சண்டை கோழிகளை மன்னாரில் வைத்து கடந்த 9 ஆம் திகதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படகு ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட 50 சண்டை கோழிகளையும் ஒன்றாகக் கட்டி மன்னார் நகருக்கு எடுத்து வருவதற்கு தயாரானபோது கடற்படையினர் அங்கு சென்று கோழிகளை கைப்பற்றியுள்ளனர்.

கோழிகளை எடுத்து வந்தவர்கள் கடற்படையினரை கண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சண்டைக்கோழிகளை கைப்பற்றும் போது அதிக நெரிசல் காரணமாக 7 கோழிகள் உயிரிழந்துள்ளன.

கோழிகளை எடுத்து வந்தவர்களை கைது செய்ய கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version