இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் வதிவிட விசா 05 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படுமென அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்படுகிறது. இது 05 வருட காலத்துக்கு அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews