நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு அமுலாகும் காலம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி புதிய மின்வெட்டு அட்டவணை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுலாகின்றது. இது சுமார் 4 முதல் 5 மணிநேரம்வரை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews

