இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

IMG 20211219 WA0044

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

#SriLankaNews

Exit mobile version