2 5
இலங்கைசெய்திகள்

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (03) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கையின் போது படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...