அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பக்கம் அமர்ந்தனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே, 11 கட்சிகளைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி பக்கம் சென்று அமர்ந்தனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம். தற்போதைய எதிர்க்கட்சிக்கு ஆதரவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் பட்டிகளை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்குள் அணிந்திருந்தனர்.
#SriLankaNews
Leave a comment