பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு!

robbery gold 1

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம், வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வீட்டார் மாலை வீடு திரும்பிய போதே வீட்டினுள் திருடர்கள் புகுந்து நகைகளை திருடி சென்றமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version