செய்திகள்இலங்கை

நாளொன்றுக்கு 3000 தொற்றாளர்கள்!!

Share

தினமும் நாளொன்றுக்கு 3000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது இலங்கையில் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 3000நோயாளிகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையான தரவுகள் ஊடகங்களில் இதுவரை வெளியாகவில்லை. வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன .

சிகிச்சை மையங்கள் இப்போது முழுவதுமாக நிரம்பி வழிகின்றது. நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

தேவைக்கேற்ப வைத்தியசாலைகளில் கொள்ளளவை அதிகரிக்கும் 6 வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கோவிட் தொற்றுநோயின் எந்தவொரு புதிய மாறுபாட்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சுகாதாரப் பிரிவிடம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...