10 27
இலங்கைசெய்திகள்

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்!

Share

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்!

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடங்கப்பட்டன.

இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகின்றன.

இதற்கிடையில், இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 7, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்களாகும்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...