வவுனியா சிறையிலிருந்து இன்று 3 கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 35, 45 மற்றும் 63 ஆகிய வயதுகளையுடைய 3 கைதிகளே இவ்வாறு விடுதலைசெய்யப்பட்டனர்.
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந. பிரபாகரன் தலைமையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 244 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews