23 17
இலங்கைசெய்திகள்

ஒகஸ்ட் 28 முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

Share

ஒகஸ்ட் 28 முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

சூரியன், தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை 28 ஆம் திகதி மதியம் 12.11 மணியளவில் நெடுந்தீவு பூனகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதுடன் மற்றைய இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...