2021 உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 27 ஆயிரத்து 352 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 22 ஆயிரத்து 928 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர்.
அதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews