தப்பியோடிய கைதிகளில் 268 பேர் சரணடைவு!

download 5 2

பொலன்னறுவை, வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தப்பிச்சென்ற கைதிகளில் 258 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை, கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்கின்றது.

அத்துடன், கைதிகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை – வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version