அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் 25 பேர் கைது!

image 1ea0ab6460

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மருதானையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 25 பேர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version